சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.
சர்வதேச போர் பதற்றம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,18,240-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ரூ. 117,840, புதன்கிழமை ரூ. 117,200-க்கு விற்பனையானது. நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 800 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 14,600-க்கும், ஒரு சவரன் ரூ. 1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 5, கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 290-க்கும், ஒரு கிலோ ரூ. 2,90,000-க்கும் விற்பனையாகிறது.
Summary
Gold and Silver Price - Today May 29 Trends
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









