அரவிந்த் ஃபேஷன்ஸின் Q2 லாபம் 19.4% அதிகரிப்பு!
அரவிந்த் ஃபேஷன்ஸ் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.44 சதவீதம் உயர்ந்து ரூ. 67.62 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

Arvind Fashions
புதுதில்லி: கேஷுவல் மற்றும் டெனிம் பிரிவில் முன்னணி நிறுவனமான அரவிந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட், செப்டம்பர் முடிய வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.44 சதவீதம் உயர்ந்து ரூ. 67.62 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. கடந்த ஆண்டு நிறுவனம் ரூ. 56.61 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
செயல்பாடுகள் மூலம் நிறுவனம் ஈட்டிய வருவாய் 9.96 சதவீதம் அதிகரித்து ரூ. 1,558.83 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்ட்டதில் இது ரூ. 1,417.51 கோடியாக இருந்தது.
செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவு 9.77 சதவீதம் அதிகரித்து ரூ. 1,474.43 கோடியாக உள்ளது. பிற வருமானத்தையும் உள்ளடக்கிய அதன் மொத்த வருமானம், நிதியாண்டிமன் செப்டம்பர் வரையான காலாண்டில் அது 9.4 சதவீதம் உயர்ந்து ரூ. 1,565.82 கோடியாக இருந்தது.
நிதியாண்டின் முதல் பாதியில், அரவிந்த் ஃபேஷன்ஸின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 11.7 சதவீதம் அதிகரித்து ரூ. 2,851.33 கோடியாக இருந்தது.
Summary
Arvind Fashions Ltd, reported a 19.44 per cent rise in consolidated net profit to Rs 67.62 crore for the September quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


