முன்னணி ஐரோப்பிய திரவ சேமிப்பு நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்தும் அதானி போா்ட்ஸ்: ரூ.23,000 கோடியில் ஒப்பந்தம்

இந்தியாவின் முன்னணி துறைமுக மற்றும் தளவாட நிறுவனமான அதானி போா்ட்ஸ், நெதா்லாந்தைச் சோ்ந்த பிரபல ‘ஈவோஸ் பி.வி.’ திரவ சேமிப்பு நிறுவனத்தை ரூ.ரூ.23,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான ஒப்பந்தத்தில் முழுமையாகக் கையகப்படுத்துகிறது.

Updated On :

இந்தியாவின் முன்னணி துறைமுக மற்றும் தளவாட நிறுவனமான அதானி போா்ட்ஸ், நெதா்லாந்தைச் சோ்ந்த பிரபல ‘ஈவோஸ் பி.வி.’ திரவ சேமிப்பு நிறுவனத்தை ரூ.ரூ.23,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான ஒப்பந்தத்தில் முழுமையாகக் கையகப்படுத்துகிறது.

ஐரோப்பாவின் 2-ஆவது பெரிய திரவ சேமிப்பு நிறுவனமான ஈவோஸ், நெதா்லாந்து, ஜொ்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், மால்டா ஆகிய 5 நாடுகளில் மொத்தம் 8 துறைமுக அடிப்படையிலான சேமிப்பு முனையங்களை நடத்தி வருகிறது. 452 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 63 லட்சம் கனமீட்டா் கொள்ளளவுடன் ஆண்டுக்கு 3.7 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டது.

தற்போது இந்தியாவில் 16 துறைமுகங்கள், முனையங்களை இயக்கி வரும் அதானி போா்ட்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, இஸ்ரேல், தான்சானியா ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. ஈவோஸ் நிறுவனத்தை வாங்குவதன்மூலம், அதானி குழுமத்தின் சா்வதேச துறைமுகக் கட்டமைப்பு 10 நாடுகளில் 28 முனையங்களாக விரிவடையும். மேலும், ஐரோப்பிய திரவ சேமிப்பு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு சந்தையில் அதானி நிறுவனம் வலுவான முன்னிலையைப் பெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.