ஊழியர்களுக்கு 15 கார்கள், 22 இருசக்கர வாகனங்களை பரிசளித்த ஹோட்டல்!

நந்தனா பேலஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாகனங்களை பரிசளித்தது பற்றி...

nandana

ஊழியர்களுக்கு 15 கார்கள், 22 இரு சக்கர வாகனங்களை பரிசளித்த நந்தனா பேலஸ் நிறுவனம் - Dinamani

Updated On :

நந்தனா பேலஸ் ஹோட்டல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 15 கார்கள் மற்றும் 22 இருசக்கர வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளது.

நந்தனா பேலஸ் ஹோட்டல் நிறுவனம் வெற்றிகரமாக 37 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 37 ஊழியர்களை தேர்வு செய்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வழங்கி கெளரவித்துள்ளது.

பெங்களூருவில் கோரமங்களாவில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற ‘நந்தனா சாதனையாளர்கள் நாள்’ கொண்டாட்டத்தில் இந்த வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் மற்றும் நந்தனா பேலஸ் நிறுவத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆர். ரவிச்சந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நந்தனா பேலஸ் ஹோட்டல் தொடங்கப்பட்டதில் இருந்தே நிறுவனத்துடன் இணைந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடனும் சிறப்பான செயல்பாட்டுடனும் பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

பரிசாக அளிக்கப்பட்ட 37 வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. ஒரு கோடிக்கும் அதிகமாகும்.

நந்தனா பேலஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிச்சந்தர் பேசியதாவது:

”நான் வங்கியில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக தொழில் தொடங்க விரும்பியதால் ஹோட்டலை தொடங்கினேன். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிகை சுஹாசினி நடித்த கதாபாத்திரம் எனக்கு மிகுந்த ஊக்கமளித்தது; அதுவே வாழ்க்கையில் முன்னேறத் தேவையான வலிமையையும் உறுதியையும் எனக்கு வழங்கியது.

இன்று நான் அடைந்துள்ள இந்த உயரத்திற்கு, என்னுடன் உறுதுணையாக நின்றவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்புமே முழுமுதல் காரணம். கரோனா காலத்தில் ஹோட்டல் துறை பெரும் பின்னடைவை சந்தித்தபோது, எங்கள் ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதற்காக எனது சொந்தச் சொத்துகளைக் கூட விற்றேன். இன்று பெரும் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், எங்கள் ஊழியர்களின் பங்களிப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரமேஷ் அரவிந்த் கூறியதாவது:

“நந்தனா என்பது மகிழ்ச்சியைப் பரப்புவதைக் குறிக்கிறது. மக்கள் உணவருந்தும்போது, ​​அவர்கள் முழுமையான திருப்தியை அடைய வேண்டும், அதை தனது வாடிக்கையாளர்களுக்கு நந்தனா ஹோட்டல் உறுதி செய்கிறது.

'மனதில் உறுதி வேண்டும்' என்பது எனது முதல் தமிழ்த் திரைப்படம். அந்தத் திரைப்படத்திலிருந்து ஊக்கம் பெற்று, ரவிச்சந்தர் இவ்வளவு அற்புதமான வணிகத்தை உருவாக்கியிருப்பது மிகவும் உத்வேகம் அளிக்கிறது. பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களுக்கு இவ்வளவு அற்புதமான பரிசுகளை வழங்குவது, தனது ஊழியர்கள் மீதான அவரது அர்ப்பணிப்பையும் நன்றியுணர்வையும் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

Summary

Company gifts 15 cars and 22 two-wheelers to its employees!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.