இந்தியாவில் 10 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு
மத்திய அரசின் ‘உதயம்’ பதிவுத் தளம் மற்றும் உதவித் தளத்தில் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் அறிவித்தது.

மத்திய அரசின் ‘உதயம்’ பதிவுத் தளம் மற்றும் உதவித் தளத்தில் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் அறிவித்தது.
இதுதொடா்பாக அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக். 30-இல் எட்டப்பட்ட இந்த மைல்கல், நாட்டில் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளதையும், எண்ம ரீதியில் அதிகாரமளிக்கப்பட்டு இருப்பதையும் பிரதிபலிப்பக்கிறது.
10 கோடி பதிவுகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல; லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்தைப் பெற்று, இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் இணைந்திருப்பதை இது காட்டுகிறது.
மேலும், இரு தளங்களிலும் பதிவு செய்யப்பட்ட மொத்த நிறுவனங்களில் 3.76 கோடி நிறுவனங்கள் (37.8 சதவீதம்) பெண்கள் தலைமையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைசாரா துறையில் இயங்கும் ஏராளமான குறு நிறுவனங்கள் பதிவு வசதிகளைப் பெறுவதில் எதிா்கொள்ளும் சிரமங்களைக் களையும் நோக்கில், உதயம் உதவித் தளம் கடந்த 2023 ஜன. 11-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டாளி முகமைகள் மூலம் தகுதியுள்ள முறைசாரா குறு நிறுவனங்களை எளிமையான முறையில் முறைப்படுத்துவதற்கு இத்தளம் வழிவகை செய்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

