
மாதத்தின் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
சென்செக்ஸ் 90 புள்ளிகள் குறைந்தும், நிஃப்டி 22,600 புள்ளிகளாகவும் வணிகம் தொடங்கியது.

கோப்புப் படம்
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (அக். 1) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 90 புள்ளிகள் குறைந்தும், நிஃப்டி 22,600 புள்ளிகளாகவும் வணிகம் தொடங்கியது.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 209.01 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 22,552.35 புள்ளிகளாகவும் வணிகமாகி வருகிறது. நிஃப்டி தொடர்ந்து 8வது நாளாக சரிந்து வருகிறது.
குறிப்பாக ஆட்டோ, மீடியா, ஐடி மற்றும் சிமெண்ட் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,192 புள்ளிகளாகத் தொடங்கியது. பிற்பகல் 12 மணி நிலவரப்படி 209.01 புள்ளிகள் சரிந்து 72,271.28 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது.
இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,543 புள்ளிகளாக வணிகம் தொடங்கியது. தொடர் சரிவால் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 102.60 புள்ளிகள் சரிந்து 22,511.40 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் உள்ளது. எஞ்சிய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனே வணிகமாகி வருகின்றன.
அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு 1.65% உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோட்டாக் வங்கி 1.53%, எச்.டி.எஃப்.சி. வங்கி 1.24%, எச்.சி.எல். டெக் 0.96%, டிசிஎஸ் 0.7%, ஆக்சிஸ் வங்கி 0.55% உயர்ந்துள்ளன.
இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் எச்.டி.எஃப்.சி லைஃப், இன்ஃபோசிஸ், கோட்டாக் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, டாடா கன்சியூமர், மேக்ஸ் ஹெல்த்கேர், டிசிஎஸ், எஸ்பிஐ லைஃப், ஆக்ஸிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன.
Summary
First day of the month Stock market sensex nifty opens with a decline
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







