காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வாரத்தின் முதல் நாளில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! பார்மா பங்குகள் ஏற்றம்! (செப். 21)

சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 23,400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வணிகமாகிறது.

stock market Sensex, Nifty climb

கோப்புப் படம்

Published On :

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 23,400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வணிகமாகிறது.

பார்மா, நுகர்பொருள் துறை பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன. தொழில்நுட்பத் துறை பங்குகள் சரிவுடன் வணிகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 426 புள்ளிகள் உயர்ந்து 74,721 புள்ளிகளுக்கு வணிகமாகி வருகிறது.

இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 23,392 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன. எஞ்சிய 20 நிறுவனங்கள் சரிவையே சந்தித்துள்ளன.

அதிகபட்சமாக சன்பார்மா பங்குகள் 2.15% உயர்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஐடிசி பங்குகள் 1.79%, கோட்டாக் வங்கி 1.43%, எச்.டி.எல். டெக் 1.4%, ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்குகள் 1.33%, எச்.டி.எஃப்.சி வங்கி 1.33%, டெக் மஹிந்திரா 0.82% உயர்ந்துள்ளது.

இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் எச்.டி.எஃப்.சி. லைஃப் 2.56%, சன்பார்மா 2.17%, எஸ்பிஐ லைஃப் 1.95%, ஐடிசி 1.79%, டாடா கம்சியூமர் 1.65%, கோட்டாக் வங்கி 1.43%, எச்.சி.எல். டெக் 1.39%, ஹிந்துஸ்தான் யூனிலிவர் 1.31%, டாக்டர் ரெட்டிஸ் 1.21% உயர்ந்துள்ளன.

Summary

stock market Sensex, Nifty climb pharma, FCMG shine, IT drags

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.