மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

செப்டம்பரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை தீவிரம்: ரூ.35,860 கோடி வெளியேற்றம்!!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதம் நிகர விற்பனையாளர்களாக மாறயதால், இந்தியப் பங்குச் சந்தையில் ரூ. 35,860 கோடியை திரும்பப் பெற்றனர்.

பங்குச் சந்தை - கோப்புப் படம்

Published On :

புதுதில்லி: தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் பங்குகளை வாங்கிய நிலையில், உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், உயர்ந்து வரும் அமெரிக்க வட்டி விகிதங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உய்ர்வு உள்ளிட்டவையால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதம் நிகர விற்பனையாளர்களாக மாறியதால், இந்தியப் பங்குச் சந்தையில் ரூ. 35,860 கோடியை திரும்பப் பெற்றனர்.

சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட், தரவுகளின் அடிப்படையில், அக்டோபர் மாதம், பங்குகளை விற்பனை செய்யும் போக்கு தொடர்ந்தது. அக்டோபர் 1 ஆம் தேதியன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து ரூ. 9,232 கோடியை திரும்பப் பெற்றனர்.

ஜூலை மாதத்தில் ரூ. 20,200 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 29,630 கோடியும், இந்தியப் பங்குகளில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தற்போது இந்த வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சமீபத்திய விற்பனையுடன், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2026ல் இதுவரை இந்தியப் பங்குகளிலிருந்து சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாயை திரும்பப் பெற்றனர். இது 2025 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான ரூ. 1.66 லட்சம் கோடி வெளியேற்றத்தை விட மிக அதிகம்.

ஹோர்முஸ் நீரிணை விநியோக அபாயங்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பலவீனமான ரூபாய் மதிப்பு, வலுவான அமெரிக்கப் பத்திர வருவாய் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வட ஆசிய சந்தையை நோக்கி முதலீடுகளைத் திருப்புதல் உள்ளிட்ட காரணிகளால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து பெருமளவில் முதலீடுகளைத் திரும்பப் பெற்றனர்.

வரும் காலங்களில், ஈரான்-அமெரிக்க மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றால் அந்நிய முதலீட்டு வரவுகள் பாதிக்கப்படும்.

இருப்பினும், மீள்தன்மை கொண்ட இந்தியப் பொருளாதாரம் மற்றும் வலுவான வருவாய் வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் சாதகமாக தொடரும்.

Summary

After two consecutive months of buying, foreign portfolio investors turned net sellers in September.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.