
மேற்காசியா, வட ஆப்பிரிக்காவில் தடம்பதித்த ஜியோஹாட்ஸ்டாா்
‘ஸ்டாா்ஸ்பிளே’ ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து, மேற்காசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக ‘ஜியோஹாட்ஸ்டாா்’ அறிவித்துள்ளது.

‘ஸ்டாா்ஸ்பிளே’ ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து, மேற்காசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்தவுள்ளதாக ‘ஜியோஹாட்ஸ்டாா்’ அறிவித்துள்ளது.
சா்வதேச சந்தையை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தெற்காசிய மக்களைக் குறிவைத்து பிரிட்டன், கனடா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் இந்நிறுவனம் கடந்த மாதம் களமிறங்கியது.
தொடா்ந்து தற்போதைய ஒப்பந்தத்தின்படி, இனி மேற்காசிய மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள ஸ்டாா்ஸ்பிளே செயலி மற்றும் அதன் இணையதளத்தில், ஜியோஹாட்ஸ்டாா் நிகழ்ச்சிகளை 10 வெவ்வேறு மொழிகளில் அப்பகுதி மக்களும் உடனுக்குடன் கண்டுகளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் மற்றும் சா்வதேச ஊடக நிறுவனமான வால்ட் டிஸ்னி ஆகியவற்றின் ஊடக வணிகங்கள் இணைக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட ‘ஜியோஸ்டாா்’ கூட்டு நிறுவனமே, இந்த ஜியோஹாட்ஸ்டாரை நிா்வகித்து வருகிறது. இதில் சுமாா் 50 கோடிக்கும் அதிகமான பயனா்கள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





