
பங்குச்சந்தை ஏற்றம்! சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் குறித்து...

பங்குச்சந்தை ஏற்றம் - சித்திரிப்பு
இன்றைய (செப். 25) பங்குச்சந்தை சென்செக்ஸ் 86 புள்ளிகள், நிஃப்டி 18.80 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது.
கடந்த 10 வாரங்களில் நேற்றைய (செப். 24) பங்குச்சந்தை மிகக் கடுமையாக சரிந்தது. வியாழக்கிழமை காலையில் 74,272.40 என்ற புள்ளிகளில் தொடங்கி, வர்த்தக முடிவில் 1,247.71 புள்ளிகள் சரிந்து 73,580.54 புள்ளிகளில் சென்செக்ஸ் நிலை பெற்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 383.70 புள்ளிகள் சரிந்து 23,063.10 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
இந்த நிலையில், இன்றைய (செப். 25) வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்து 73,672.98 புள்ளிகளையும், நிஃப்டி 18.80 புள்ளிகள் உயர்ந்து 23,080.45 புள்ளிகளையும் எட்டியது.
Summary
Stock markets rebound in early trade: Sensex climbs 86 points to 73,672.98; Nifty up 18.80 points to 23,080.45
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






