
ரூ. 2,700 கோடி ஐபிஓ திட்டத்தை கைவிட்டது பிரெஸ்டீஜ் நிறுவனம்
ரூ. 2,700 கோடி ஐபிஓ திட்டத்தை கைவிட்டது பிரெஸ்டீஜ் நிறுவனம்

சந்தையில் நிலவும் நிலையற்ன்மை மற்றும் இதர காரணங்களால், தனது விடுதி வணிகப் பிரிவின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டு (ஐபிஓ) திட்டத்தை தற்காலிகமாகக் கைவிடுவதாக பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் அறிவித்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், நாட்டின் முக்கிய நகரங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் விடுதிகளை நிா்வகித்து வருகிறது.
இந்நிலையில், இதன் விடுதி நிறுவனமான பிரெஸ்டீஜ் ஹாஸ்பிடாலிட்டி வென்சா்ஸ், ஐபிஓ மூலம் ரூ.2,700 கோடி நிதி திரட்டும் நோக்கில் கடந்த ஆண்டு ஏப்ரலில் செபியிடம் வரைவு அறிக்கையைச் சமா்பித்திருந்தது.
ஆனால், தற்போது வியூகரீதியான காரணங்கள் மற்றும் சாதகமற்ற சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற இயக்குநா்கள் குழு முடிவெடுத்துள்ளது.
எனினும், வருங்காலத்தில் சந்தை நிலவரங்கள் சீரடையும்சூழலில், உரிய அனுமதிகளுடன் மீண்டும் புதிய வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






