பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள், நிஃப்டி 300 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாவது பற்றி...

stock market

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம் - கோப்புப்படம்

Published On :

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று காலை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஈரானின் முன்மொழிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை எதிர்மறையாகத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 851.82 புள்ளிகள் (1.15%) சரிந்து 73,043.92 ஆகவும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 277.55 புள்ளிகள் (1.20%) சரிந்து 22,863.05 ஆகவும் வர்த்தகமானது.

காலை 10.45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,016.22 புள்ளிகள் சரிந்து 72,879.52 ஆகவும், நிஃப்டி 313.95 புள்ளிகள் சரிந்து 22,826.55 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

தற்போது சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீஸை தவிர, மற்ற 29 பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டியைப் பொறுத்தவரை வங்கி, மிட்கேப், ஆட்டோ, ஸ்மால்கேப், ஐடி உள்ளிட்ட துறைகள் சரிவைக் கண்டுள்ளன.

Summary

Sensex falls 1,000 points, Nifty drops 300 points!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.