காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (செப். 29)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 29) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது.

தங்கம் விலை சனிக்கிழமை (செப். 26) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.1,12,000-க்கு விற்பனையானது.

திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ. 235 குறைந்து, ரூ.13,765-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 1,880 குறைந்து ரூ. 1,10,120-க்கு விற்பனையானது. மாலையில் கிராமுக்கு மேலும் ரூ. 100 குறைந்து ரூ. 13,665-க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,09,320-க்கும் விற்பனையானது. இதனால் திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,680 குறைந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,120-க்கும் கிராமுக்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 240-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

The price of ornamental gold in Chennai has decreased by Rs. 200 per sovereign today (Sept. 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER