தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா? (செப். 8)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....

gold

தங்கம் - கோப்புப்படம்

Published On :8 செப்டம்பர் 2026, 9:59 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.8) சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து, ரூ.1,14,880-க்கு விற்பனையானது.

வார இறுதி நாளான சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 170 குறைந்து, ரூ.14,190-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, ரூ.1,13,520-க்கு விற்பனையானது.

வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,130-க்கும் சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.8) கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,270-க்கும் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,260-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255, கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

The price of ornamental gold in Chennai has increased by 1,120 per sovereign today (Sept. 8).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.