தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

இந்திய பங்குச்சந்தை 2-வது நாளாக சரிவு!

இந்திய பங்குச்சந்தை 2-வது நாளாக சரிவுடன் வர்த்தகமாவது பற்றி...

பங்குச்சந்தை.

பங்குச்சந்தை. - கோப்புப்படம்

Published On :

இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,579.08 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 647.25 புள்ளிகள் (0.89%) சரிந்து 72,124.47 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 188.40 புள்ளிகள் (0.83%) சரிந்து 22,592 .25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சென்செக்ஸில் சன்பார்மா, இண்டிகோ, அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர, மற்ற 26 நிறுவனங்களின் பங்குகளும் சரிசைக் கண்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஈரானின் முன்மொழிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்.

மேலும், கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பது, வங்கி பங்குகள் கடுமையாக சரிவு, உலக பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவை பங்குச்சந்தையில் இன்று தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Summary

Indian stock market falls for the second consecutive day!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.