டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அழகிரியை குறி வைக்கும் ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநில தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாட்டி ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வரும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் அவர் இப்போது தி.மு.க.வின் தென்மண்டல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:07 am

வி.தேவதாசன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநில தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாட்டி ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வரும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் அவர் இப்போது தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை குறிவைத்துத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

 தென்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை அதிக அளவில் நிறுத்தி வெற்றி பெற வைப்பதுதான், தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு நலன் பயக்கும் என அழகிரி கருதுவதாகக் கூறப்படுகிறது.

 அந்த வகையில் தென் மாவட்டங்களில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இப்போதே தொடங்கி விட்டாராம் அழகிரி. தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 80 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள செல்வாக்கு, ஆளும் தி.மு.க.வுக்கு உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்தெல்லாம் இப்போது அழகிரி தீவிரமாக ஆராய்ந்து வருகிறாராம்.

 அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி தொகுதியையும் அழகிரி விட்டு வைக்கவில்லை. ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திய அழகிரி, அடுத்த தேர்தலில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை தோற்கடிப்போம் என்றும் சூளுரைத்தார்.

 எனவே, அழகிரியின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆண்டிப்பட்டி விழாவில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள், தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனத்திலிருந்து வழிப்பறி செய்யப்பட்டது என்றும், இதில் அழகிரிக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆனால், அழகிரி வழங்கியது அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட ஹார்லிக்ஸ்தான் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர் தெரிவித்ததால், அந்த விஷயம் அடங்கிவிட்டது.

 இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பணி நியமனம், ஆசிரியர்கள் பணிமாற்றம் போன்றவற்றில்  பெரும் ஊழல் நடக்கிறது என்று குற்றஞ்சாட்டி வெள்ளிக்கிழமை மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.

கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்றும், எனவே, ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் அழகிரிக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

÷அழகிரியின் செயல் வேகத்தைக் குறைக்கவே அவரை குறிவைத்து ஜெயலலிதா தாக்குதல் தொடுத்து வருகிறார் என்கின்றனர் திமுக தொண்டர்கள்.

 வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு ஜெயலலிதா புதிய அரசியல் உத்திகளை வகுத்து, செயலாற்றி வருகிறார். அந்த திட்டங்களில் ஒன்றுதான் கோவை, திருச்சி கண்டன பொதுக் கூட்டங்கள்- நாள்தோறும் அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். இது தொடரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.