அவர் வருவாரா...?
அடுத்து என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற அரசியல் சூழலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கூட்டுப் போராட்டம் நடத்த மீண்டும் ஒருமுறை ஜெயலலிதாவை சந்தித்து அழைப்பு விடுப்பதென கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்


அடுத்து என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற அரசியல் சூழலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கூட்டுப் போராட்டம் நடத்த மீண்டும் ஒருமுறை ஜெயலலிதாவை சந்தித்து அழைப்பு விடுப்பதென கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இந்த வாரம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க மத்திய அரசு மறுப்பதைக் கண்டித்தும், ஊழலை மக்களிடம் அம்பலப்படுத்தும் நோக்கிலும் நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிகளை நடத்துவது என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர்த்து பிற எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளில் இப்போது இடதுசாரி கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஊழல் நடவடிக்கைகளைக் கண்டித்து தலைநகர் சென்னையில் மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலதாவும் பங்கேற்க வேண்டும் என்று அவரை அழைப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் இன்னும் சில தினங்களில் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடும் என தெரிகிறது. எனினும், இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்பாரா என்று தெரியவில்லை.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அ.தி.மு.க. அணியில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 26-ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி மாநில நிர்வாகிகள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அக்டோபர் 18-ம் தேதி மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்குப் பின் இது பற்றி பரிசீலிப்பதாக ஜெயலலிதா கூறியிருந்தார்.
எனினும், கூட்டுப் போராட்டம் பற்றி
ஜெயலலிதா எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த சூழலில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் பற்றி விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் வலியுறுத்தி வரும் ஜெயலலிதா, இடதுசாரி கட்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியில் நிச்சயம் கலந்து கொள்வார் என்றும், இல்லையெனில் அக்கட்சியின் பிற மூத்த தலைவர்களையாவது கலந்து கொள்ளச் செய்வார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர்.
அவர் வருவாரா...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...