டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூரத்து இடி முழக்கம்...

கூட்டணிகள் உருவாகவும், உடையவும் ஏதாவது ஒரு சம்பவம் திரும்புமுனையாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பொது வேலைநிறுத்தப் போராட்டம் அப்படியொரு திருப்புமுனையை தமிழகத்தில் ஏற்படுத்துமா என்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:09 am

வி.தேவதாசன்

கூட்டணிகள் உருவாகவும், உடையவும் ஏதாவது ஒரு சம்பவம் திரும்புமுனையாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பொது வேலைநிறுத்தப் போராட்டம் அப்படியொரு திருப்புமுனையை தமிழகத்தில் ஏற்படுத்துமா என்று அரசியல் நோக்கர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் கூட்டாக இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

 இந்தப் போராட்டத்தில் தே.மு.தி.க.வும் பங்கேற்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் அழைத்துள்ளன. இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 இதற்கு முன்பு, அத்தியாவாசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்து ஏப்ரல் 27-ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இடதுசாரி மற்றும் ம.தி.மு.க. தலைவர்கள் பங்கேற்றனர்.

 அப்போது, பொது வேலைநிறுத்தத்தில் தே.மு.தி.க.வும் பங்கேற்றால், போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், விஜயகாந்தை சந்தித்து,போராட்டத்தில் பங்கேற்க வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனராம்.

 எனினும், இந்த யோசனையை ஜெயலலிதா உடனே நிராகரித்து விட்டாராம். தே.மு.தி.க.வை அழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்பதையும் அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தெரிவித்தாராம்.

 தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து, கூட்டுப் போராட்டங்களை நடத்துவதை மட்டுமே ஜெயலலிதா விரும்புகிறார் என்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் அப்போது தெரிவித்தனர்.

 இதற்கிடையே, அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே வெளிப்படையான சந்திப்புகள் நடைபெறக் கூடும் என்றும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. ஆனால், இதனை அ.தி.மு.க.வோ, தே.மு.தி.க.வோ இதுவரை மறுக்கவில்லை.

 இந்நிலையில், ஜூலை 5-ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி விஜயகாந்தை சந்திக்கப் போவதாக தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனும் அழைப்பு விடுத்துள்ளார்.

 ஜெயலலிதாவின் ஒப்புதலுடனேயே இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகக் கூறப்படுகிறது.

 எனினும், அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது உறுதியாகாதவரை, இதுபோன்ற கூட்டுப் போராட்டங்களில் பங்கேற்பது சரியாக இருக்காது என்று தே.மு.தி.க. தரப்பில் கருதுவதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதில் ராகுல்காந்தி முனைப்பாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அவ்வாறு திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வந்தால் காங்கிரஸýடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் விருப்பமாம்.

÷எது எப்படியிருப்பினும் எதிர்க்கட்சிகள் 5-ம் தேதி நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் தேமுதிக பங்கேற்குமா, பங்கேற்காதா என்பதைப் பொறுத்துதான் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகங்கள் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.