டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காட்டேரியும் குட்டிச்சாத்தானும்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2-ம் தேதி பா.ம.க. பொதுக்குழுக் கூடியது. இதில், கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாஸýக்கு அதிகாரம் அளித்து சம்பரதாய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நல்ல வேளை, கடந்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:48 am

வி.தேவதாசன்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2-ம் தேதி பா.ம.க. பொதுக்குழுக் கூடியது. இதில், கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாஸýக்கு அதிகாரம் அளித்து சம்பரதாய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 நல்ல வேளை, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தியது போன்ற நாடகம் எதுவும் இப்போது நடைபெறாது என்று கூறி பா.ம.க.வினர் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்களாம்.

ஆனால் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் அய்யாவும், சின்ன அய்யாவும் இன்னொரு விஷயத்தைக் கூறி காமெடி செய்ததாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதாவது, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 18 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் 36 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அய்யா கூறியுள்ளார்.  கட்சியில் உள்ள இளைஞர்கள் ஒத்துழைத்தால், 36 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று சின்ன அய்யாவும் கூறியுள்ளார்.

 இது பற்றி பா.ம.க.வினர் சிலரிடம்  கேட்டபோது,  எங்களால் 36 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா, முடியாதா என்பதை பிறகு பார்க்கலாம்.  தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய எந்த அணியாக இருந்தாலும், பா.ம.க.வுக்கு 36 தொகுதிகளை ஒதுக்க யார் தயாராக இருக்கிறார்கள்?

முதலில், பா.ம.க.வுக்கு 36 தொகுதிகளை அய்யா வாங்கட்டும். அதுவே எங்களுக்கு பெரிய வெற்றிதான் என்று கமெண்ட் அடிக்கின்றனர்.  யாருடன் கூட்டணி என்பது பற்றி பா.ம.க. பொதுக்குழுவில் ஏதேனும் முடிவு செய்யப்பட்டதா என  பா.ம.க. வட்டாரங்களில் விசாரித்தபோது

 "அசிங்கமான காட்டேரியுடன் கூட்டு சேர்வதை விட, அழகான குட்டிச்  சாத்தானுடன் கூட்டு சேர்வது எவ்வளவோ மேல்' என்ற அடிப்படையிலேயே அவ்வப்போது கூட்டணிகளை மாற்றி வருவதாக அய்யா கூறினாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.