மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முருங்கைக் கீரை கோலா

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை தண்ணீரில் ஊற வைத்து உப்பு, சோம்பு இவற்றைப்

News image
Updated On :15 ஜூன் 2016, 6:38 am

தேவையானவை:

முருங்கைக் கீரை - 1 கிண்ணம்

துவரம்பருப்பு - 50 கி

கடலைப் பருப்பு - 50 கி

வெங்காயம் - 50 கி

சோம்பு - 1 தேக்கரண்டி

பட்டை, மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையானவை

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை தண்ணீரில் ஊற வைத்து உப்பு, சோம்பு இவற்றைப் போட்டு இட்லி மாவுப் பதத்தில் அரைத்து எடுத்து பட்டை, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து  இட்லித் தட்டில் வைத்து பத்து நிமிடம் வெந்தெடுத்து ஆறியதும் உதிர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடுகு தாளித்து வெங்காயம், கீரை இவற்றை வதக்கி உதிர்த்த கோலாவையும் கொட்டி மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.