வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 1. சிவபுராணம்-2

ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி,தேசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி,

News image
Updated On :15 ஜூலை 2015, 5:12 am

என்.சொக்கன்


2

பாடலின்பம்

ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி,

தேசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி,

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி,

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி,

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

பொருளின்பம்

இறைவன் திருவடிகளுக்கு வணக்கம்,

எங்கள் தந்தை திருவடிகளுக்கு வணக்கம்,

ஒளி நிறைந்த வடிவம் கொண்டவனின் திருவடிகளுக்கு வணக்கம்,

சிவனின் செம்மையான திருவடிகளுக்கு வணக்கம்,

அடியவர்களின் அன்பில் நிற்கிற தூய்மையான நிமலனின் திருவடிகளுக்கு வணக்கம்,

மாயப் பிறப்பு என்னும் சுழலை அறுக்கின்ற மன்னனின் திருவடிகளுக்கு வணக்கம்,

சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் தேவனின் திருவடிகளுக்கு வணக்கம்,

சொல்லின்பம்

* ஈசன்: இறைவன்

* எந்தை: என் தந்தை

* தேசன்: தேசு: ஒளி நிறைந்தவன்

* சேவடி: செம்மை + அடி: சிவந்த திருவடிகள், அல்லது செம்மையான திருவடிகள்

* நேயம்: அன்பு (நேசம்)

* நிமலன்: தூய்மையானவன் (அசுத்தங்கள் இல்லாதவன்)

* சீர்: சிறப்பு

* ஆர்: நிறைந்த

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.