வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 16 – திருப்பொன்னூசல் -2

அழகிய மயில் போன்ற தோற்றத்தையும், அன்னநடையையும் கொண்ட பெண்களே,

News image
Updated On :24 அக்டோபர் 2015, 10:47 am

என்.சொக்கன்

ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

106

பாடலின்பம்

மூன்று அங்கு இலங்கு நயனத்தன், மூவாத

வான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள்

தேன்தங்கி தித்தித்து அமுதுஊறித்தான் தெளிந்துஅங்(கு)

ஊன்தங்கி நின்றிருக்கும் உத்தரகோசமங்கைக்

கோன்தங்கு இடைமருது பாடிக் குலமஞ்ஞை

போன்றுஅங்கு அனநடையீர், பொன்னூசல் ஆடாமோ.

பொருளின்பம்

அழகிய மயில் போன்ற தோற்றத்தையும், அன்னநடையையும் கொண்ட பெண்களே,

சிறந்து விளங்கும் மூன்று கண்களை உடையவன் சிவபெருமான், மூப்பில்லாமல் எப்போதும் இளமையாகத் திகழ்கிற, வானத்தில் தங்குகிற தேவர்களும் காண இயலாத மலரடிகள் அவனுடையவை,

அந்த மலரடிகளில் தேன் தங்கித் தித்தித்து அமுதம் ஊறும், அவற்றில் சரணடைய நமக்குத் தெளிவு கிடைக்கும், அப்பெருமானின் திருவடிகள் நம் உள்ளத்தில் என்றைக்கும் தங்கிநிற்கும். 

உத்தரகோசமங்கையின் தலைவனான அப்பெருமான் தங்கும் திருவிடைமருதூரின் சிறப்பைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோம்.

சொல்லின்பம்

இலங்கு: திகழ்கிற

நயனத்தன்: கண்களை உடையவன்

மூவாத: மூப்பு அடையாத/ எப்போதும் இளமையாக இருக்கிற

ஊன்: உடல்

கோன்: தலைவன்

மஞ்ஞை: மயில்

அனநடையீர்: அன்னநடை கொண்டவர்களே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.