வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 16 – திருப்பொன்னூசல் - 7

எண்ண இயலாத அளவு சிறப்புகளைக் கொண்ட திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளி விளங்கும் பெருமான்,

News image
Updated On :29 அக்டோபர் 2015, 10:52 am

என்.சொக்கன்

ஊசல் என்றால், ஊஞ்சல். பெண்கள் ஊஞ்சலில் ஆடியபடி பாடக்கூடிய பாடல்கள் இவை. அவற்றில் சிவபெருமானின் பெருமையைப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.

இந்தப் பகுதியில் ஒன்பது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

111

பாடலின்பம்

உன்னற்குஅரிய திரு உத்தரகோசமங்கை
மன்னிப் பொலிந்துஇருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்துஇறைஞ்சப் பாவங்கள் பற்றுஅறுப்பான்
அன்னத்தின்மேல் ஏறிஆடும் அணிமயில்போல்
என்அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்ஒத்த பூண்முலையீர், பொன்னூசல் ஆடாமோ.

பொருளின்பம்

திருமகள்போல் அழகானவர்களே, ஆபரணங்கள் அணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களே,

எண்ண இயலாத அளவு சிறப்புகளைக் கொண்ட திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளி விளங்கும் பெருமான், வேதங்களின் தலைவன் சிவபெருமான், அவனுடைய புகழைப் பாடிப் பணிந்து இறைஞ்சினால், நம்முடைய பாவங்களையும் பற்றுகளையும் அறுத்துவிடுவான், என் தந்தையாகிய அந்தப் பெருமான் என்னையும் ஆட்கொண்டான், அவனுடைய எழிலைப் பாடுவோம், அன்னத்தின்மேல் ஏறி ஆடும் அழகிய மயிலைப்போல நாம் பொன்னூசல் ஆடுவோம்.

சொல்லின்பம்

உன்னற்கு: நினைப்பதற்கு

அரிய: அரிதான

மன்னி: நிலைபெற்று

மாமறையோன்: சிறந்த வேதங்களின் தலைவன்

பன்னி: பலமுறை சொல்லி

இறைஞ்ச: வணங்க

அணிமயில்: அழகிய மயில்

அத்தன்: தந்தை

பூண்: ஆபரணம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.