பதச் சேதம் | சொற் பொருள் |
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய
| புடை: புடைத்த, பருத்த; செப்பு: சிமிழ்; உள்பொருமி: உள்ளே விம்மி(ப் பருத்து); |
புளக களப கெருவ தன மெய் புணர தலை இட்டு அமரே செய்
| புளகம்: மயிர்க்கூச்சம்; களபம்: (சந்தனக்) கலவை; கெருவ: கர்வ(ம் கொண்டு); |
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான
| அடைவு: ஒழுக்க முறை; அவசப்படுதல்: வசமிழத்தல்; எற்கு: எனக்கு; பதடி: உமி; அவமான: அவம் ஆன—வீணான; |
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே
|
|
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே
| கட: மத்தகம்; கரட: கன்னக் கதுப்பு; கலுழி: மதநீர்; களிறு: விநாயகன்; |
குடி புக்கிட மிட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா
| குடி புக்கிட: குடிபுக; மிட்டு: மீட்டு (குறுக்கல் விகாரம்) தகர: தகர்ந்து போகுமாறு; |
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள்
| படலை: குலையிலுள்ள சீப்பு; செறி: அடர்ந்த; கதலி: வாழை; |
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே.
| பழனக் கரை: வயற்கரை; கழை: மூங்கில் (மூங்கில் முத்து பிறக்கும் இடங்களிலொன்று); |
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமிக் கலசத்து இணையாய புளகக் களபக் கெருவத் தன மெய்ப் புணரத் தலை இட்டு அமரே செய்... பருத்ததும்; சிமிழ்போன்றதும்; முத்து மாலை அணிந்ததும்; கச்சு தெறித்துப் போகும்படியாக விம்மிதம் எய்தியதும்; கலசத்தை ஒத்ததும்; மயிர்க்கூச்சம் கொண்டதும்; சந்தனக் கலவை பூசப்பட்டதுமாக செருக்குற்றுத் திமிர்ந்த மார்பகங்களோடு சேரத் தலைப்பட்டு பூசலிடுகின்ற,
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே... ஒழுக்கத்தை எப்போதும் மேற்கொண்டு வசமிழந்து மயங்கும் என் மீது; அறிவற்றவனும்; பயனற்றவனுமான எனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாத உன்னுடைய கிருபையைக் கொண்டு, அடிமையாகிய எனக்கு ஒப்பற்ற உபதேசத்தைச் செப்பியருள வேண்டும்.
குடம் ஒத்த கடக் கரடக் கலுழிக் குணம் மெய்க் களிறுக்கு இளையோனே... குடத்தை ஒத்த கன்னக் கதுப்பிலிருந்து மதநீர் பெருகுகின்ற தன்மையையுடைய யானைமுகனான விநாயகனுக்கு இளையவனே!
குடி புக்கிட மி(மீ)ட்டு அசுரப் படையைக் குறுகித் தகரப் பொரும் வேலா... (தேவலோகத்துக்குக்) குடியேறுமாறு (தேவர்களைச் சூரனுடைய சிறையிலிருந்து) மீட்டு, அசுரப்படைகளை நெருங்கி, அவை தகர்ந்துபோகுமாறு போரிட்ட வேலனே!
படலைச் செறி நல் கதலிக் குலையில் பழம் முற்(றி) ஒழுகப் புனல் சேர் நீள் பழனக் கரையில் கழை முத்து உகு நல் பழநிக் குமரப் பெருமாளே.... சீப்புகள் அடர்த்தியாக நிறைந்துள்ள வாழைக் குலை நன்கு கனிந்து அதிலிருந்து தேன் ஒழுக; நீர் நிறைந்த வயற்கரைகளில் மூங்கில்கள் முத்தை உகுக்கின்ற பழநிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!
சுருக்க உரை
குடம்போன்ற மத்தகத்திலிருந்தும் கன்னக் கதுப்பிலிருந்தும் மதநீர் பெருகும் இயல்புள்ள களிறான விநாயகனுக்கு இளையவனே! தேவர்கள் தம்முடைய லோகத்திலே மீண்டும் குடியேறுமாறு அவர்களை அசுரர்களின் சிறையினின்று மீட்டு; அசுரப் படைகள் தகர்ந்துபோகுமாறு போரிட்ட வேலனே! சீப்புகள் அடர்த்தியாக நெருங்கியுள்ள வாழைக் குலைகள் கனிந்து அவற்றிலிருந்து தேன் ஒழுகுவதும்; நீர் நிறைந்த வயற்கரைகளில் மூங்கில்கள் முத்தை உகுப்பதுமான பழநிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!
பருத்ததும்; சிமிழ்போன்றதும்; முத்துமாலை அணிந்ததும்; கச்சு தெறித்துப் போகும்படியாக விம்முவதும்; கலசத்தை ஒத்ததும்; மயிர்க்கூச்சம் கொண்டதும்; சந்தனக் கலவை பூசப்பெற்று செருக்குற்றுத் திமிர்ந்ததுமான மார்பகங்களோடு சேர்வதை எண்ணிப் பூசலிடும் ஒழுக்கத்தையே என்றென்றும் மேற்கொண்டு தன் வசத்தை இழந்து மயங்குபவனும்; அறிவற்றவனும் பயனற்றவனுமான எனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாத உன்னுடை கிருபையை வெளிப்படுத்தி, அடிமையாகிய எனக்கு ஒப்பற்றதான உபதேசத்தைப் புரிந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

ஜன நாயகன் படம் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றக் காவலில் அடைப்பு

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்
பெங்களூரு அணியிடம் வீழ்ந்த மும்பை! வான்கடேயில் ஆர்சிபி அசத்தல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

