‘உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்’ என்று கேட்கின்ற இந்தப் பாடல் எட்டிக்குடிக்கானது.
தொங்கல் சீர் நீங்கலாக, எல்லாச் சீர்களுமே நேர்நிரைநேர் என்ற புளிமாங்காய் வாய்பாட்டு அமைப்பை உடையதும் முற்றிலுமே வல்லொற்றுகளால் ஆனதுமான பாடல். அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன. எல்லாச் சீர்களிலுமே நான்கு நான்கு குற்றெழுத்துகள் உள்ளன. இவற்றில் நான்காவதாக இடம்பெறும் வல்லொற்று கணக்கில் சேராதது.
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த தனதான
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலைதைக்க அகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட னுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

ஜன நாயகன் படம் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றக் காவலில் அடைப்பு

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்
பெங்களூரு அணியிடம் வீழ்ந்த மும்பை! வான்கடேயில் ஆர்சிபி அசத்தல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


