‘முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்ற ஈற்றடியோடு முடியும் பத்து அல்லது பதினோரு பாடல்களில் இதுவும் ஒன்று. பொருளின் மீது வைத்திருக்கும் பற்றை அறுக்கக் கோரும் இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அமைப்பு முறையில் இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில். ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் தனதான
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
பொய்ப்போ கத்தைப் பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
கித்தே கைக்குப் பொருள்தேடித்
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
திக்கோ டிப்பச் சிமமான
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
விக்கோ டிக்கெட் டிடலமோ
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
ரைச்சா ரத்தற் பரமானாய்
தப்பா முப்பா லைத்தே டித்தே
சத்தோர் நிற்கத் தகையோடே
முற்கா னப்போ தைக்கா கப்போய்
முற்பால் வெற்பிற் கணியானாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

ஜன நாயகன் படம் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றக் காவலில் அடைப்பு

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்
பெங்களூரு அணியிடம் வீழ்ந்த மும்பை! வான்கடேயில் ஆர்சிபி அசத்தல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


