06.02.1920: இந்திய சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு தினம் இன்று!
மோதிலால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரும், இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.


மோதிலால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரும், இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவக்ர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.
இவர் 1861ம் ஆண்டு மே மாதம் காஷ்மீரி பண்டித் குடும்பத்தில் பிறந்தார். ஜெய்ப்பூரில் வசித்து வந்த இவரது தந்தை, தில்லியில் காவலராக பணிபுரிந்தார். இவரது பாட்டனார், ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீஹிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர்.
மோதிலால் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து, கேம்ரிட்ஜ் சென்று பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். வழக்கறிஞராக வாழ்கையை ஆரம்பித்த மோதிலால் நேரு, காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்தார்.
1919–1920 மற்றும் 1928–1929 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இவர் பதவி வகித்தார். அதோடு சுயாட்சிக் கட்சி மூலம் ஆங்கிலேய அரசுக்கெதிராக போராடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...