22.01.2004: கூகிளின் சமூக வலைதள சேவையான ஆர்க்குட் துவக்கப்பட்ட தினம் இன்று!

ஆர்க்குட் அல்லது ஓர்க்குட் (Orkut) கூகிள் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட இணையவழி வழங்கும் சமூக வலையமைப்பு சேவையாகும்.
22.01.2004: கூகிளின் சமூக வலைதள சேவையான ஆர்க்குட் துவக்கப்பட்ட தினம் இன்று!
Updated on
1 min read

ஆர்க்குட் அல்லது ஓர்க்குட் (Orkut) கூகிள் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட இணையவழி வழங்கும் சமூக வலையமைப்பு சேவையாகும். பெரிய ஆரவாரம் எதுவும் இன்றி ஆர்க்குட் ஜனவரி 22, 2004 இல் கூகிளினால் தொடங்கி வைக்கப்பட்டது.இதனைத் தொடங்கிய கூகிள் ஊழியர் ஆர்க்குட் புயுக்கோக்டன் என்பவருடைய பெயராலேயே இந்த சேவை 'ஆர்க்குட்' என அழைக்கப்பட்டது.

இந்த சேவையானது புதிய நட்புறவை வளர்ப்பதோடு இருக்கின்ற நண்பர்களின் தொடர்பையும் நட்புறவையும் பேணிப் பாதுகாக்கின்றது. ஆர்க்குட் அப்போது அதற்கு போட்டியாக இருந்த இதர குமுக வலையமைப்புகளைக் காட்டிலும் மிகுந்த உரையாடல் விவாதத்தளங்களுக்கும் வழி வகுத்தது. இதில் ஆரம்பத்தில் அழைப்பின் பேரிலேயே இதில் இணையமுடியும்.

தற்போது பிரபலமாக உள்ள சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்க்கு முன்னோடியாக திகழ்ந்த ஆர்க்குட் சேவையானது 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com