பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மனிதனும் தெய்வமாகலாம்!

சிவந்தால் பத்தும் பறந்துபோகும். பசித்த நேரத்தில் ஒருவாய் ஆகாரம் தருபவன் எவனோ அவனே இறைவன் என்கின்றன சாஸ்திரங்கள். அதேபோல் புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்கிறார் வள்ளுவர். மனிதனே தெய்வமாவதற்கான

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:32 pm IST

சிவந்தால் பத்தும் பறந்துபோகும். பசித்த நேரத்தில் ஒருவாய் ஆகாரம் தருபவன் எவனோ அவனே இறைவன் என்கின்றன சாஸ்திரங்கள். அதேபோல் புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்கிறார் வள்ளுவர். மனிதனே தெய்வமாவதற்கான இந்த அரிய இரண்டு சந்தர்ப்பங்களை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை, நெசப்பாக்கத்தில் அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள வள்ளலார் தொண்டு நிறுவன வளாகத்தில், கொளப்பாக்கம் கே.சந்தானம் நிகழ்த்திய ஆன்மீகச் சொற்பொழிவிலிருந்து சில கருத்துக்கள்:

""சன்மார்க்கம் என்றால் "தர்மம்' என்று அர்த்தம். சமயம் கடந்த சன்மார்க்கத்தை அறிமுகப்படுத்தியவர் திருஅருட்பிரகாச வள்ளலார். 1867-ல் வடலூரில் சத்திய தர்ம சாலையைத் தோற்றுவித்தார். அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே "ஜீவ காருண்யம்'. இதுதான் முக்தி அடைவதற்கான முதற்படியாக அமைகிறது. வடலூரில் 1867, வைகாசி 11-ம் நாளில் வள்ளல்பெருமான் ஒரே நாளில் நீர் நிலைகள் அமைத்தார். தர்மசாலை நிறுவினார். பசியாறுவதற்காக அன்னம் இடுதலையும் ஆரம்பித்து வைத்தார்.

முறையான கல்வியை, கல்விச்சாலை சென்று பெறவில்லையென்றாலும், இறைவனின் திருவருளைப் பெற்றவர் வள்ளலார். அவருக்குக் கல்வி பயிற்றுவிக்க மற்றவருக்குத் தகுதியில்லாததால் இறைவனிடத்தில் கற்றார். அவர் பொருள் தேடவே இல்லை. பணத்தின் மீது அவருக்கு ஆசை இருந்ததில்லை. பணத்தை அவர் யாரிடமும் யாசித்துப் பெறவுமில்லை.

வள்ளலாரின் திருஅருட்பா மிகமிக எளிமையான வரிகளில், எவருக்கும் படிக்கும்போதே நன்றாகப்பொருள் புரிந்து கொள்ளுமாறு அமைந்துள்ள சிறப்பினைக் கொண்டது'' என்று வள்ளல் பெருமானின் ஆழ்ந்த கருத்துக்களை மேற்கோள் காட்டி சந்தானம் விளக்கினார்.

"பசி'யைப் பற்றி மிகச்சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை அவர் கூறினார்.

""விழுப்புரம் செல்லும் பெரிய சாலையில் ஒரு கோர விபத்து நடந்து போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்து போய்விட்டது. மணிக்கணக்கில் இருமருங்கிலும் வாகனங்கள் நின்றன. குழந்தைகளும் முதியவர்களும் என எல்லோரும் பசியால் வாடினர். அங்கிருந்த கிராம மக்கள் பசி போக்கிட தந்த உணவில் எவைஎவை கிடைத்தாலும் அதை, சாதி, சமய, வேறுபாடுகளை மறந்து எல்லோரும் பகிர்ந்து கொண்டனர். எனவே "பசி' என்று வரும்போது எந்த வேறுபாடும் தெரிவதில்லை. பசி தீர்க்கும் எண்ணம் மட்டுமே இருக்கும். ஏற்றத்தாழ்வுகள் அந்த நேரத்தில் யாருக்கும் எழாது.

பயம், துன்பம், தாகம், நோய் போன்றவற்றோடு மனிதர்கள் போராடலாம். வெகு காலம் கூட வாழலாம். ஆனால் பசியோடு நீண்ட காலம் போராட முடியாது. பசி வாட்டும். கொல்லும். பசித்தோரின் பசியாற்றுவதும் ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம் மூலமாக இறைவன் அருள் என்ற திறவு கோலைக் கொண்டு பேரின்ப வீட்டின் உயர்வடையலாம்.

கொல்லா நெறி பற்றி வேறேந்த கோட்பாடுகளிலும் முக்கியமானதாகச் சொல்லபடவில்லை. ஆனால் இந்த நெறியை வள்ளல் பெருமான் சுத்த சன்மார்க்கத்தில் அழுத்தமாக உணர்த்தியுள்ளார்.

இப்போதெல்லாம் மெத்த படித்தவர்கள், உயர்பதவியில் இருப்பவர்கள், தவறென்று தெரிந்திருந்தும் புலால் உண்கிறார்கள். இது மிகவும் வருந்தக்கது. எல்லா உயிருக்குள்ளும் உயிராக உள்ளவன் இறைவன். இந்த சரீரத்தை ஆலயமாக்கி இறைவன் படைத்திருக்கிறான்.  

உழவுமாடு ஆலயமாகிய தன் சரீரத்தைக் கொடுத்து தேய்ந்து போகும் வரை உழைத்து, உழைத்து மனிதனுக்கு வேலை செய்து கொடுக்கிறது. ஆனால் அதனை சக்கையாய் பிழிந்தெடுக்கும் மனிதன், வயதாகி தேவைப்படாதபோது, அதை வெட்டுவதற்காக இறைச்சிக் கடைக்கு கொடுத்து விடுகிறான். இது எவ்வளவு பாவமான செயல்?'' எல்லா உயிர்களையும் தன்னுயிரைப்போல பார்க்கும் உணர்வை வகுத்துக் கொள்ளல் வேண்டும் என்று ஆணித்தரமாய் விளக்கிய சந்தானத்தின் பேச்சில் கூட்டத்தார் யாருக்கும் மாற்றுக் கருத்து தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

சந்தானத்தின் பேச்சில் இருந்து சில சுவாரஸ்யமான நறுக்குகள்..

புலால் உண்ணாதவர்கள் தான்மட்டும் உண்ணாமல், தெரிந்தே மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது, புலால் உண்ணப் பணம் தந்து உதவுவதுகூட ஒரு வகையில் சன்மார்க்க சங்க நெறிகளுக்கு முரண்பட்டதேயாகும்.

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களில்

ஈடுபடுவோர்கள்  நுழைவதற்குத்தடை இருந்தது. அது எல்லோரும் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற வள்ளல் பெருமானின் எண்ணத்தை பறை சாற்றும்படியாக உள்ளது.

புராண காலத்தில்கூட வியாச முனிவர், சுக்ர முனிவருக்கு வித்யாதானம் என்ற கல்விக் கொடை மற்றும் அன்னதானம் என்கிற பசியாற்றுதலைப் பற்றி முக்கியமாக போதித்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவகாருண்யம் தொடர்ந்து செய்வதால் நான், எனது என்ற பற்றுகள் மறைந்து விடுகின்றன. ஞானம் பிறக்கிறது. எனவே ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகிற எந்தச் செயலும் பிரயோசனமில்லாமலே போய்விடும். ஜீவகாருண்யமே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாக, ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்துள்ளது.

இன்றைய மனித சமூகம் கடைபிடிக்க வேண்டிய அவசியமான வள்ளல் பெருமானின் உயர்ந்த கோட்பாடுகளில் சில:

*கடவுள் ஒருவரே.

*அவரை ஜோதி வடிவில் உண்மையான அன்பு கொண்டு வழி படவேண்டும்.

*தெய்வங்களின் பெயரால் உயிர் பலி கூடாது.

*புலால் உண்ணலாகாது.

*சாதி, சமய வேறுபாடுகள் கூடாது.

*எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.

*ஏழைகளின் பசியைத் தவிர்ப்பதே ஜீவகாருண்ய ஒழுக்கம். இந்தப்பணியே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

*மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.

*எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.