ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டாசு சத்தம் - கா. மகேந்திரபிரபு

Updated On :1 நவம்பர் 2016, 10:57 am

பட்டாசு நகர் சிவகாசி -தருமே 
பாருக்கெல்லாம் பட்டாசுகளை  !
தொழில் புரட்சி  - உலகம் வியக்க 
குட்டி ஜப்பான் - நேரு சொன்னது !

தீபாவளி - பட்டாசு சத்தம் 
திரும்பிய பக்கமெல்லாம் சத்தம் - பட்டாசு சத்தம் 
தீமை  இருள் நீங்க 
தீபஒளி ஒளிக்கட்டுமே
அமைதி களைய வேண்டும் 
பட்டாசு சத்தம் ஒலிக்கட்டுமே  

இனிப்புகள் பரிமாற - அன்பு !
இன்ப வெள்ளமாய் - காதல் 
தலை தீபாவளி காணும் 
தம்பதிகளுக்கு பட்டாசு சத்தம் !

பறவைகளுக்கு கிழவிகளுக்கும் 
பிறந்த குழந்தைகளுக்கும் 
பட்டாசு சத்தம் வேட்டு சத்தம் பட
படப்பைத் தரும் பட்டாசு  ஒலி !

இல்லங்களில் மாற்றம் காண 
இனிமை சேர வாழ்த்துக்கள் !
பட்டாசு சத்தம் கேட்போம் 
பட்டாசு சத்தம் ஒலிக்கட்டுமே 
பக்குவம் பிறக்க சத்தம்  வேண்டும் 
பட்டாசு சத்தம் பட்டாசு சத்தம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.