ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டதாரி: கவிஞர் இரா .இரவி

Updated On :7 நவம்பர் 2016, 9:10 am

பட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி 
பட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது !

தெருவுக்கு ஒரு பொறியாளர் இருந்தார் அன்று ஒரு
வீட்டில் பல பொறியாளர் உள்ளனர் இன்று !

வேலையில்லா பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு உள்ளனர் 
விவசாயம் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும் !

பட்டதாரி படித்த  படிப்பிற்கு வேலை இல்லை 
பட்டதாரி தேடும் வேலை கிடைப்பதில்லை !

கிடைக்கும் வேலை பார்க்க மனமில்லை 
கிடைக்காத வேலையின் மீது ஏக்கம் உண்டு !

கல்வி  பெருகியது  என்பது முற்றிலும்  உண்மை 
பண்பு பெருகவில்லை என்பது கசப்பான உண்மை !

திருட்டு வழக்கில் பொறியாளர் கைது செய்தி படித்து 
திடுக்கிட்டோம் இதற்காகவா பயின்றான் என்று !

படித்தவன் மோசம் செய்தால் ஐயோ என்று போவான்
பாரதி பாடி வைத்தான் நல்ல பாடல் அன்று !

படிப்பறிவு இருக்கும் பலருக்கும்  இன்று 
பொது அறிவு பற்றாக்குறை இருக்கு !

நீதிபோதனை வகுப்புகள் பள்ளிகளில் 
நிறுத்தப்பட்ட காரணத்தால் மாணவர்கள் !

நீதி ,நேர்மை ,ஒழுக்கம்  ,மனிதநேயம்
நல்ல அறம் எதுவும் அறியவில்லை இன்று !

மது அருந்தி போதையோடு  பள்ளி சென்ற மாணவன்
மேலான ஆசிரியரைக் கொலை செய்த மாணவன் !

வரும் செய்திகள் யாவும் வேதனை தருகின்றன
வருங்காலங்களில் இக்கொடுமைகளை வேண்டாம் !

கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இனி 
கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் !

பட்டதாரிகள் பெருகிப் பயனில்லை இன்று
பண்பாளர்கள் பெருகிட வழி வகை செய்யுங்கள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.