தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

 நீ கண் சிமிட்டினால்: பொன்.இராம்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:57 am

கவிதைமணி

மழலைப் பருவத் தொட்டிலில்
அம்புலிப் பருவக் கண் சிமிட்டலில்
உறவுகளின் ஆனந்தக் களிப்பு!

எச்சிலில் இனித்த பண்டங்கள்
மிச்சமாய் தந்தையின்
வயிற்றுக்கு ஆனந்த உணவு!

கை தொட்டு பலகையில்
எழுதும்போது நீ
சிமிட்டிய கண்சிமிட்டலில்
தாயின் ஆனந்த சிரிப்பு!

உள்ளாடை தெரிய
இழுத்து மறைத்த
குட்டை பாவாடையின்
பரிகசிப்பு உன் வளைவுகளின்
கண்சிமிட்டலில்
ஒளிந்து கொண்டன!

பெண்ணே! மங்கைப்பருவம்
முழுதும்தான் தங்கமென
தரணி எங்கும் உறவுகள்
பெருமை பேச
நீ சிமிட்டும் அங்க அசைவு
அநாகரிக சிமிட்டலில்
உடல் அழகு என்றும் நிரந்தரமல்ல
என்றே நீயும் உணர்ந்திடு!

காமுகப் பேய்கள் கண்டபடி
உலா வரும் போதினில்
எட்டி நின்றே சென்றிடு!
உன் மானம் காக்க
என்றும் நீ தயங்காதே! 

கட்டான உடல் அழகை
காமுகர்கள் கண்டு ரசிக்க
கிட்டவே வந்திட்டால்
கீறிடவே ஆயுதங்கள்
குறைவின்றி கொணர்ந்திடுவாய்!

படுக்கையறைப் பதுமையாய்
ஆணுக்கிங்கே  இணையாக
போராடவல்ல உனது பிறப்பு!

திருமண வாழ்வெனும்
தோணியிலே வாழ்க்கைக் கடலில்
விளையாடி செயிக்கும்
உன்னதக் குடும்ப வாரிதியாய்
உருவாகி விடு!
உன் கல்விக் கண் சிமிட்டலில்
உலக அரங்கில் உன் பார்வை
பதிந்திடவே உறவுகள்
உன்னை வாழ்த்திடவே
பன்முகப் பார்வையில்
பவனி வந்திட நூல்
பல படைத்திடு!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.