தனிமையோடு பேசுங்கள்: செந்தில்குமார் சுப்பிரமணியன்

Updated on
1 min read

தத்தித் தாவும் மனதை அடக்க
எத்திக்கும் செல்லாதீர்
ஆழ்ந்து மூழ்கி உள்ளொளி பெருக்க
அங்கே கிடைக்கும் ஓர் தனிமை.
வருவதும் போவதும் தனிமையிலே
வாசி ( மூச்சு) ஓட்டமும் தனிமையிலே,
ரசிப்பதும் - புசிப்பதும் தனிமையிலே
பசித்து தனித்து விழித்திருக்க
முறைகள் பகன்றனர் ஞானியரும்
முற்றும் துறந்து முடி வற்று
சற்றும் வாழப் பிடிக்காது
ஆற்றங்கரையில் நடக்கையிலே
ஆனந்தனுக்கு சொன்னார் புத்தருமே,
அழகில் லயித்து நிற்பதுமே, ஆசை என்று
அறிந்திடுவாய்  - ஆசை உள்ள நாள் வரைக்கும் 
ஞானம் கிட்டாதென்றுரைக்க, 
ஆசை - அற்று பற்றற்று 
ஆணவமாயை அகற்றிட வே
அல்லல் அகலும் அருள் ஓங்கும், 
தேவைகளற்ற கங்குலிலே ஓங்காரத்தொலி 
உடன் வரவே - தனித்து உள்ளே
நிற்பீரேல் - தனிமை - இனிமை ஆகிடுமே,
யோகியர் கூற்றிதை உணர்ந்திட்டால் - 
ஆழ்நிலை தானே சித்திக்கும்
ஊழின் வலிமையை
உடைத் திடலாம்.
உணர்வோம் - உணர்வோம்
மண் மீதில்!!
தனிமை பேசக் கேட்டிடுவோம்
இனிமையை இங்கு கூட்டிடுவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com