தனிமையோடு பேசிடவே தன்னிலையறிதல் வேண்டும்இனிமையோடு உறவாடும் இன்பநிலையுணர வேண்டும்உரிமையோடு அனைவரிடமும் உண்மையைப்பேச வேண்டும்பெருமையோடு வாழ்ந்திடவே பேருறுதிகொள்ள வேண்டும்!எத்தனை உறவுகள் எதிரெதிரே இருந்தாலும்அத்தனை தொடர்பினையும் ஆத்மா ஒதுக்கிவிட்டுதன்னந் தனிமையிலே தனக்குள்ளே குரலெழுப்பும்எண்ணந் தானே யென்றும் எழிலாகும் வாழ்வினிலே!தான் மட்டும் இருப்பதுவே தனிமையென்று அறிந்தவர்கள்தனக்குள்ளே குரலொன்று சப்தமாய் ஒலிப்பதையேஎப்பொழுதும் அறிவார்கள் ஏகமாய் அது சொல்லும் வழியையே பின்பற்றி வாழ்க்கையையே வென்றிடுவார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.