/
வெல்லுகின்ற சொல்லொன்று வசமாக வேண்டும் வேட்கையுடன் அதன்பின்னே நாம்செல்ல வேண்டும்சொல்லுகின்ற சொல்லதனை முன்னிறுத்த வேண்டும் சொல்லுக்குப் பிறிதொருசொல் இல்லாமல் வேண்டும்பல்லுயிரும் விரும்புகின்ற சொல்லாக வேண்டும் படைப்போனை ஈர்க்கின்ற மந்திரச்சொல் வேண்டும்தொல்லையெலாம் போக்குகின்ற நற்சொல்லாய் வேண்டும் தொடக்கமென வருகின்ற பொருட்சொல்லாய் வேண்டும்.வித்தையெலாம் அறியவைக்கும் வியன்சொல்லாய் வேண்டும வேதங்கள் மொழிகின்ற ஒருசொல்லாய் வேண்டும்புத்துலகம் காட்டுகின்ற புதுச்சொல்லாய் வேண்டும் புத்தகங்கள் அறியாத பெருஞ்சொல்லாய் வேண்டும்நித்தமுமே நிம்மதியைத் தருஞ்சொல்லாய் வேண்டும் நிர்மலமாய் மனவமைதி பெறுஞ்சொல்லாய் வேண்டும்எத்திசையும் புகழ்மணக்கும் இன்சொல்லாய் வேண்டும் இயன்றவரை நிறமறியாத் தனிச்சொல்லாய் வேண்டும்.நாள்தோறும் அச்சொல்லை நாம்சொல்ல வேண்டும் நலமாக்கும் அருட்சொல்லே நாப்பேச வேண்டும்ஆள்சொல்லாய் அகச்சொல்லாய் நமையாள வேண்டும் அன்பென்னும் அருளன்னை வாய்சொல்லாய் வேண்டும்கோள்பேசும் கொடுஞ்சொல்லில் லாதிருக்க வேண்டும் கோபச்சொல் நீக்கியதோர் காதற்சொல் வேண்டும்மீள்விரும்பும் மிகுசொல்லாய் வாழ்க்கையிலே வேண்டும் வெற்றியினை வழங்குவதே வெல்லுஞ்சொல் லன்றோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

