ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: கவிஞர் ராம்க்ருஷ்

Updated On :11 ஜூன் 2018, 9:36 am
ஊட்டி விடும் தேனமுது குழந்தைக்கு இனிக்கும்காட்டி விடும் பாச அன்பு சொற்களில் குளிக்கும்ஈட்டியென பாயும் சொற்கள் மனதைக் கிழிக்கும்மீட்டிடும் இசையென வழியும் சொற்கள் சுகிக்கும்இன்சொல் தீயவனையும் மயக்கித் திருத்திடும்வன்சொல் நல்லவனையும் நாயாக்கி வருத்திடும்புன்னகையின் சொற்கள் மனிதனாய் நிறுத்திடும்இன்னலிலும் இனிக்கும் சொற்கள் தேற்றிவிடும்தகுதியான தரமிக்கவரைப் புகழும் சொற்கள்மிகுதியான ஆணவச் செருக்கழிக்கும் சொற்கள்பகுந்துண்ணும் புரவலர் புழங்கிடும் சொற்கள்வெகுமதி தந்து ஊக்கிடும் ஊக்கச் சொற்கள்இனிய சொற்களே அன்பின் இலக்கணம் உலகில்கனியென இனித்து கயவரையும் கவர்ந்திடுமதுபனியெனத் துன்பங்களை நீராக்கிப் போக்கிடும்தனித்துவ இனிமைச் சொற்கள் வென்றிடுபவையேஊக்கம் தரும் சொல்லெல்லாம் வெல்பவையேஆக்கம் தரும் சொற்களும் ஊக்கம் தருபவையேநீக்கிடுவோம் வன் சொற்களை நாவை விட்டேதேக்கிடுவோம் இனிய சொற்களின் வெற்றியையேபற்களில் வெண்மை அழகூட்டும் முகத்திற்கேகற்களில் பளிங்கு மெருகூட்டும் கட்டிடத்திற்கேபுற்களின் பசுமை குளிர்ச்சி தரும் பசுந்தரைக்கேசொற்களின் இனிமை வென்றிடும் உலகையே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.