டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

நெடுநல்வாடை பதிப்பு வரலாறு (1889-2017)

இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டும் வகையிலும் இந்த நூல் அமைந்திருக்கிறது.

Updated On :

நெடுநல்வாடை பதிப்பு வரலாறு (1889-2017) - முனைவர் அ.புவியரசு; பக்.194;ரூ.200, காவ்யா, சென்னை-24; ✆044- 23726882.

பத்துப்பாட்டு பிரிவில் 7 -ஆவது நூல் நெடுநல்வாடை. இது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக்கி, நக்கீரரால் பாடப்பட்ட 188 அடிகளைக் கொண்ட பாக்களால் உள்ளது. போர் புரிய சென்ற தலைவனைப் பிரிந்ததால் வாடும் தலைவி, இருவருக்கும் ஏற்படும் மனநிலையை மையமாக்கிய பாடல்களாக உள்ளன. உ.வே.சாமிநாதையர் போன்றோரின் அயராத முயற்சியாலேயே இதுபோன்ற சங்கக் கால நூல்கள் அச்சு வடிவம் பெற்றன. அந்தவகையில் நெடுநல்வாடை பதிப்பித்த முறையையும், பதிப்பாளர் விவரங்களையும் 44 தலைப்புகளில் ஆவணங்கள் மூலமாகத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.

மூன்று முறை பதிப்பிக்கப்பட்டாலும், தனிநூலாக 1931-இல் வை.மு.கோ. முயற்சித்துள்ளதாகவும், ஆனால், கு.கோதண்டபாணி பிள்ளையே அப்பணியை செய்துள்ளதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். உரையாசிரியர்கள் கருத்தின்படி சில முரண்பாடுகள் இருப்பதும், அதை சீர்படுத்திய முறையை நூலில் விளக்கியிருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.

நெடுநல்வாடை குறித்த அண்மைக்கால நூல்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் சரியா?, தவறா? என்ற கோணத்திலும் நூலாசிரியர் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கிய நூல்கள் ஆய்வு தற்போதைய இளந்தலைமுறையிடம் குறைந்து வரும் நிலையில், ஆய்வுக்கான தளத்தை எளிமைப்படுத்தும் வகையிலும், புதிய கோணத்தில் தமிழ்ச் சங்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.