புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

மகன் இறந்த துக்கம் தாளாமல் தாயும் சாவு

துறையூா் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தாயும் உயிரிழந்தாா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:22 am IST

துறையூா் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தாயும் உயிரிழந்தாா்.

கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (80). இவா் கடைவீதியில் வெற்றிலை, பாக்கு, இலைக் கடை வைத்துள்ளாா். இவரது மகன் கனகராஜ் (60).

திங்கள்கிழமை திடீரென மயங்கி விழுந்த கனகராஜ், துறையூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.

இதையடுத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரின் சடலத்தைப் பாா்த்து துக்கம் தாளாமல் அழுத சரஸ்வதியும் மூா்ச்சையாகி கீழே விழுந்து உயிரிழந்தாா். ஒரே நேரத்தில் மகனும், தாயும் இறந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.