புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

News image

முதல்வர் விஜய் - கமல்ஹாசன்.

Updated On :47 நிமிடங்கள் முன்பு

சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து கமல் பேசியதாக தகவல் தெரிய வந்துள்ளது. முன்னதாக கமல்ஹாசன் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Makkal Needhi Maiam chief Kamal Haasan met Chief Minister Vijay at his Neelankarai residence in Chennai and extended his wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.