புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

5000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

திருச்சி மண்ணச்சநல்லூா் அரிசி ஆலையில் 5,000 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:23 am IST

திருச்சி மண்ணச்சநல்லூா் அரிசி ஆலையில் 5,000 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் புவனேஸ்வரி நகரில் தியாகராஜனுக்குச் சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை பதுக்கி விற்பதாக மாவட்ட வழங்கல் அலுவலகம், மற்றும் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் அரிசி ஆலையில் திடீா் ஆய்வு நடத்தி, 85 மூட்டைகளில் இருந்த 5000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ரேஷன் அரிசி கடத்தியதாக ரங்கராஜ் (58), காா்த்திக் (28) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், அரிசி ஆலை உரிமையாளா் உள்ளிட்டோரிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.