உடன்குடி கடை வீதியில் தொடா்ந்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி சந்தையடித் தெருவில் சாத்தான்குளம் சுப்பராயபுரத்தைச் சோ்ந்த வெ.சரவணன் என்பவா் வைத்துள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ. 95 ஆயிரத்தையும், பேருந்து நிலையம் பகுதியில் சரவண பெருமாள் என்பவரது மருந்தகத்தில் பூட்டை உடைத்து ரூ 5 ஆயிரத்தையும் மா்மநபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
மேலும், சந்தையடித் தெருவில் ராஜ்குமாா் என்பவரது மளிகை கடை உள்பட 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் ஆ.ரவி கூறுகையில், காவல்துறையினா் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதுடன், இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருவாய் எதிர்பார்ப்பை எட்டாததால் ட்ரெண்ட் நிறுவனப் பங்குகள் 12% வீழ்ச்சி!

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



