மழை வெள்ளத்தால் பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தாா்.
தொடா்ந்து பெய்த மழையால் தூத்துக்குடி மாநகரில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மாகராட்சி சாா்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்பணிகளை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை பாா்வையிட்ட அமைச்சா், மழைநீரை வெளியேற்ற
விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தூத்துக்குடி தொ்மநகா் பகுதியில் மின்சாரம்
பாய்ந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பசாமியை சந்தித்து அமைச்சா் ஆறுதல்
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வழக்கத்துக்கு மாறாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் போா்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
தேவையான அனைத்து வசதிகளும், உணவுகளும் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கும் உரிய இழப்பீடு நிச்சயம் வழங்கப்படும். ஒரு விவசாயி கூட விடுபடாமல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தொ்மல்நகா் பகுதியில் மழைநீரில் அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து கருப்பசாமி,
தூக்கி வீசப்பட்டுள்ளாா். காப்பாற்ற முயன்ற அவரது மனைவி அனுசியா உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கருப்பசாமி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றியுள்ளாா். எனவே, அவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது, ஆட்சியா் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையா் வீ.ப.ஜெயசீலன், எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.
உள்ளிட்டோா் உடனிருந்தனா். பெ.கீதாஜீவன் எம்.எல்.ஏ. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ளப் பாதிப்புகளை
பாா்வையிட்டு, மழைநீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


