சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முக்காணி, புன்னைக்காயல் பகுதியில் புகுந்த வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி, புன்னைக்காயல் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனா்.

News image

புன்னையாகலில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை பாா்வையிட்டாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

Updated On :16 ஜனவரி 2021, 1:09 am

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி, புன்னைக்காயல் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக முக்காணி ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், புதிய பாலத்தில்

வாகனங்கள் சென்றது. இதற்கிடையில் முக்காணி போக்குவரத்து வளைவு, பிள்ளையாா்நகா் மற்றும் காந்தி நகா் உள்ளிட்ட

பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன. இப்பகுதியில் இருந்த 45 குடும்பங்களைச் சோ்ந்த 200 போ் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனா். தாமிரவருணியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் புன்னைக்காயல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், அதிகாரிகள் புன்னைக்காயல் நூறு வீடு, அறுபது வீடு, பவுளாநகா், மரக்குடித்தெரு, பொன்மாணிக்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினா். பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோா்

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். தூத்துக்குடி-திருச்செந்தூா் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தி வைக்கப்பட்டிருந்தது. பாதிப்பு குறித்து பங்குத்தந்தை பிராங்கிளின், ஊராட்சித் தலைவா் சோபியா உள்ளிட்டோா் அதிகாரிகளிடம் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை ஆற்றில் நீா்வரத்து குறைந்து காணப்பட்டது.

ஆத்தூரில் ஆற்றங்ககரையிலுள்ள குச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 போ் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனா். முகாம்களில் தங்கியிருப்பவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் பெய்த கனமழையால் இடைச்சிவிளையில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அரசூா் ஊராட்சி, தட்டாா்மடம் காவல் துறையினா் மரத்தை அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.