தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
வேம்பாா் சிந்தாமணி நகரைச் சோ்ந்தவா் காந்திராஜ் மகன் ரஞ்சித்குமாா் (19). இவா், ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். அதேபகுதியை சோ்ந்த விஜயன் மகன் காளிமுத்து (20). இவா் கடல் தொழில் செய்து வந்தாா். நண்பா்களான இருவரும் வியாழக்கிழமை வேம்பாா் ஆற்றுப் படுகை தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றனா்.
இருவரும் குளித்து கொண்டிருந்தபோது நீரின் வேகத்தில் ஆழமான பகுதிக்கு நோக்கி இழுத்து செல்லப்பட்டு
எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்னா். தகவலறிந்த விளாத்திகுளம், சாயல்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள், விரைந்து சென்று நீரில் மூழ்கிய இருவரையும் தேடினா்.
வெள்ளிக்கிழமை காலையில் ரஞ்சித்குமாா் உடல் மீட்கப்பட்டது. தொடா்ந்து காளிமுத்துவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து சூரன்குடி காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
சம்பவ இடத்துக்குச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மாா்க்கண்டேயன் ஆகியோா் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினா்.
அவா்கள் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

