மரக்காணம் கலவரத்தின்போது, விபத்தில் இறந்தவர்களாக கூறப்பட்ட இரு இளைஞர்களில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் சித்திரை பெருவிழாவிற்கு வாகனத்தில் சென்ற அரியலூர் செல்வராஜ், தஞ்சாவூர் விவேக் ஆகிய இருவரும், மரக்காணத்தில் நடைபெற்ற சாலை மறியலின்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். அவர்கள், விபத்தில் இறந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸýம், அவரது கட்சியினரும் கூறி வந்தனர்.
இந்நிலையில், அவர்களில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேதபரிசோதனை மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

