வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆதனூரில் உழவர் பெருவிழா

திருநாவலூர் ஒன்றியம் ஆதனூரில் வேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :2 மே 2013, 7:03 am

திருநாவலூர் ஒன்றியம் ஆதனூரில் வேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார்.      முன்னாள் ஒன்றிய செயலாளர் சௌ.பாலு, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பி.வேலு முன்னிலை வகித்தனர். திருநாவலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேவநாதன் வரவேற்றார்.

  துணை வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், பழனிவேல், பழனிசாமி, பன்னீர்செல்வம், சிறப்பு பொருள் அறிஞர் சிவபெருமான், நாராயணன், ஆத்மா குழு தொழிற்நுட்ப உதவியாளர் கவிதா, கொளுஞ்சி, செம்மனங்கூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கர், ஆதனூர் கிளை செயலாளர்கள் கே.சக்திவேல், கே.பெருமாள், பிரதிநிதிகள் எம்.சந்திரன், கே.கண்ணன், ஏ.சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 விழாவில் கைத் தெளிப்பான், சொட்டுநீர் பாசன உரம், கலப்பு உரம் என 50 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.