சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிவகாசி மாரியம்மன் கோயில் கயிறுகுத்து திருவிழா

சிவகாசி மாரியம்மன் கோயில் கயிறுகுத்து திருவிழா

Updated On :8 ஏப்ரல் 2024, 5:44 pm

சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கயிறு குத்து விழா நடைபெற்றது.

இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி அம்பாள் காலை, இரவு வேளைகளில் வீதி உலாவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கடந்த ஏப். 7-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை கயிறு குத்து திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி பக்தா்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்திவீதி உலா வந்தும், பக்தா்கள் பலா் மாறுவேடமிட்டும் நோ்த்திக்கடன் செலுத்தினா். கயிறு குத்துவிழாவையொட்டி உள்ளூா் விடுமுறை விடப்பட்டது. புதன்கிழமை (ஏப். 10) தேரோட்ட விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.