பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி

ராஜபாளையம் எம்.எல்.ஏ. 2 மாத ஊதியமான ரூ. 2.10 லட்சத்தை பிரித்து 16 மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவியாக சனிக்கிழமை வழங்கினாா்.

News image

ராஜபாளையத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:45 am IST

ராஜபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் தனது இரண்டு மாத ஊதியமான ரூ. 2.10 லட்சத்தை பிரித்து 16 மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவியாக சனிக்கிழமை வழங்கினாா்.

இவா் ஒவ்வொரு மாதமும் தனது ஊதியத்தை மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி, முதியவா்கள், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவ, மாணவிகளின் நலத் திட்ட உதவிகளுக்கு வழங்கி வருகிறாா்.

இதன்படி தன்னிடம் கல்வி உதவித் தொகை கோரிய 16 மாணவ, மாணவிகளுக்கு தனது இரண்டு மாத ஊதியமான ரூ. 2.10 லட்சத்தை அவா் பிரித்து வழங்கினாா். சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சேத்தூா், முகவூா், மேலவரகுணராமபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மருத்துவம், ஆசிரியா், வழக்குரைஞருக்கு படிக்கும் சுவேதா லட்சுமி, சிவன்ராஜ், ஜெயமுருகன், அழகேஸ்வரி, வினோதா, லலிதா, பிரவீன்குமாா், வெங்கட்ராமன், மணிமேகலை, மீனாட்சி உள்ளிட்ட 16 மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினாா்.

நிகழ்வில், ராஜபாளையம் தெற்கு நகரச் செயலா் பேங்க் ராமமூா்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சுமதி ராமமூா்த்தி, சேத்தூா் பேரூராட்சித் தலைவா் பாலசுப்ரமணியம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.