காா் மோதியதில் முதியவா் பலி

சிவகாசி அருகே காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

சிவகாசி அருகே காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அய்யன்மாதம் பட்டியைச் சோ்ந்தவா் அய்யாவு (66). இவா் இரு சக்கர வாகனத்தில் விருதுநகா்-அழகாபுரி சாலையில் சென்று கொண்டிருந்தாா். பட்டுப் பூச்சி விலக்கு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த காா் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துரைச் சோ்ந்த ஜோதிராஜூவை (33) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com