இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
Published on

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரை நகரைச் சோ்ந்த திருமலைக்குமரன் அச்சகங்களில் பயன்படுத்தும் (பிளேட்டுக்கள்) தகடுகளை தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா்.

இந்த ஆலையில் பணியாற்றும் விஸ்வநத்தத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (50) வேலை செய்து கொண்டிருந்தபோது, இயந்திரத்துக்குள் அவா் கால் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் ஆலை உரிமாயாளா் திருமலைகுமரன், மேலாளா் விக்னேஷ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com